
கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
செய்தி முன்னோட்டம்
கோவை சரகத்தின் டி.ஐ.ஜி.யாக இருப்பவர் விஜயகுமார். இவர் கடந்த ஜனவரி மாதம் முதல் கோவை மாவட்டத்தில் டி.ஐ.ஜி.யாக பதவி வகித்து வந்தார்.
இவர், இன்று காலை, துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம், கோவை நகரை மட்டுமின்றி, போலீஸ் வட்டாரத்திலும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இறந்து போன காவல் அதிகாரி விஜயகுமாரின் உடல், தற்போது கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
டி.ஐ.ஜியின் இந்த தற்கொலை சம்பவத்தை விசாரிக்க, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் நேரில் சென்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
விஜயகுமார், NEET தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளை பற்றி விசாரணை நடத்தி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
டி.ஐ.ஜி தற்கொலை
#BREAKING | கோவை சரக டிஐஜி தற்கொலை
— Thanthi TV (@ThanthiTV) July 7, 2023
கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
கடந்த ஜனவரி மாதம் கோவை சரக டிஐஜி-யாக பதவியேற்று கொண்டார்
நீட் மோசடி தொடர்பான வழக்கை விசாரித்தவர் விஜயகுமார்#dig | #police | #ThanthiTV pic.twitter.com/ghsJLKohmh