டெல்லி, நொய்டாவில் தொடரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
செய்தி முன்னோட்டம்
டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) பல பகுதிகளில் இன்று காலை மிதமான மழை பெய்தது. இதனால் சில படங்களில் தண்ணீர் தேங்கியது.
டெல்லியில் உள்ள ஜன்பத், ஐடிஓ, மிண்டோ ரோடு, ஆசிரமம், ஆனந்த் விஹார் மற்றும் மயூர் விஹார் போன்ற பகுதிகளும், நொய்டா மற்றும் ஃபரிதாபாத்தின் பல இடங்களில் இன்று அதிகாலை மழை பெய்தது.
டெல்லியில் மேகமூட்டத்துடன் கூடிய கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) கணித்துள்ளது.
அடுத்த சில மணிநேரங்களில், வடக்கு டெல்லி, வடகிழக்கு டெல்லி, மத்திய டெல்லி, புது டெல்லி, தெற்கு டெல்லி, தென்கிழக்கு டெல்லி, கிழக்கு டெல்லி மற்றும் பிராந்தியங்களில் லேசான இடியுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இந்தியா
பஞ்சாப் மற்றும் ஹரியானாவிலும் மழை பெய்ய வாய்ப்பு
லோனி டெஹாட், ஹிண்டன் ஏஎஃப் ஸ்டேஷன், காசியாபாத், இந்திராபுரம், சப்ராவுலா, நொய்டா, தாத்ரி, கிரேட்டர் நொய்டா, ஃபரிதாபாத் மற்றும் பல்லப்கர் உள்ளிட்ட என்சிஆர் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் இன்று காலை தெரிவித்துள்ளது.
ஹரியானாவில் உள்ள கன்னௌர், சோனிபட், சோஹ்னா, பல்வால் மற்றும் நூஹ் போன்ற அண்டை பகுதிகளிலும், உத்தரபிரதேசத்தில் பராட், பாக்பட், கெக்ரா, சிக்கந்திராபாத் மற்றும் குர்ஜா போன்ற பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
"ஜூலை 13 ஆம் தேதி பஞ்சாப் மற்றும் ஹரியானா-சண்டிகர் ஆகிய மாநிலங்களுடன் டெல்லியில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பரவலாக பெய்யக்கூடும்" என்று வானிலை துறை நேற்று கணித்தது.