ED-இன் மனுவை பரிசீலிக்க கால அவகாசம் தேவை எனக்கூறி கெஜ்ரிவாலின் ஜாமீன் நிறுத்தி வைப்பு
டெல்லி உயர்நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விசாரணை நீதிமன்றம் அளித்திருந்த ஜாமீனை மீண்டும் இடைநிறுத்தியது. அதோடு ED -யின் மனுவை பரிசீலிக்க கூடுதல் அவகாசம் தேவை என்று கூறியுள்ளது. முன்னதாக இந்த வார தொடக்கத்தில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, அமலாக்க இயக்குனரகம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அமலாக்க இயக்குனரகத்தின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், கெஜ்ரிவாலின் ஜாமீனுக்கு தடை விதித்து, விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தவும் டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. ED தனது மேல்முறையீட்டை தெரிவிக்க இன்று வரை கால அவகாசம் அளித்திருந்தது டெல்லி உயர் நீதிமன்றம்.
கெஜ்ரிவாலின் ஜாமீன் நிறுத்தி வைப்பு
விசாரணை நீதிமன்றத்தினை விமர்சித்த டெல்லி உயர்நீதிமன்றம்
இன்றைய தீர்ப்பை அறிவிக்கும்போது, விசாரணை நீதிமன்றம் இந்த வழக்கில் ED வழங்கிய "ஆதாரங்களை" புறக்கணித்து ஜாமீன் வழங்கியது என உயர்நீதிமன்றம் விமர்சித்தது. நீதிபதி ஜெயின், "விசாரணை நீதிமன்றத்தின் அவதானிப்பு முற்றிலும் நியாயமற்றது, மேலும் இது விசாரணை நீதிமன்றம் அந்த ஆதாரங்களில் தனது மனதைப் பயன்படுத்தவில்லை என்பதைக் காட்டுகிறது" என்றார். பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ) பிரிவு 45 மீது விடுமுறைக் கால நீதிபதியால் போதுமான விவாதம் இல்லை என்றும் உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது.
கெஜ்ரிவால் கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார்
கடந்த வியாழனன்று, டெல்லியின் ரோஸ் அவென்யூ நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க ஒப்புதல் அளித்தது. கெஜ்ரிவாலின் குற்றம் இன்னும் நிறுவப்படவில்லை என்றும், குற்றத்தின் வருமானத்துடன் அவரை இணைப்பதற்கான நேரடி ஆதாரங்களை ED வழங்கத் தவறிவிட்டது என்றும் குறிப்பிட்டது. மறுநாள், விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ED மேல்முறையீடு செய்தது. டெல்லி உயர்நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையை அடுத்து, உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார். இதற்கிடையில், கெஜ்ரிவாலின் ஜாமீனுக்கு தடை விதித்த டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு "வழக்கத்திற்கு மாறானது" என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தின் தடையை எதிர்த்து கெஜ்ரிவாலின் மனு மீதான விசாரணையை ஜூன் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.