Page Loader
செல்போன் வெடித்ததால் அவசரமாக தரையிறக்கட்ட ஏர் இந்தியா விமானம் 
இதனால் ஏற்பட்ட புகையை கவனித்த ஒரு விமானி உடனடியாக விமானத்தை தரையிறக்கினார்.

செல்போன் வெடித்ததால் அவசரமாக தரையிறக்கட்ட ஏர் இந்தியா விமானம் 

எழுதியவர் Sindhuja SM
Jul 17, 2023
06:11 pm

செய்தி முன்னோட்டம்

ராஜஸ்தானின் உதய்பூரில் இருந்து புது டெல்லியிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் திடீரென்று ஒரு செல்போன் வெடித்ததால் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கட்டது. உதய்பூரில் அந்த விமானம் 'டேக் ஆப்' செய்த போது ஒரு பயணியின் செல்போன் பேட்டரி வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட புகையை கவனித்த ஒரு விமானி உடனடியாக விமானத்தை தரையிறக்கினார். எனினும், தரையிறப்பட்ட ஒரு மணிநேரத்திற்குள் பிரச்சனை சரிபார்க்கப்பட்டு விமானம் உதய்பூரில் இருந்து உடனடியாக புறப்பட்டது. இது போன்ற சம்பவம் இந்திய விமானங்களில் நடப்பது இது முதல் முறையல்ல.

ஓஜிக்

கடந்த மாதம் டெல்லியில் அவசரமாக தரையிறப்பட்ட இண்டிகோ விமானம் 

கடந்த மாதம், ஜூன் 21 ஆம் தேதி, டெல்லியில் இருந்து உத்தரகண்ட் மாநிலம் டேராடூனுக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம்( 6E 2134), புறப்பட்ட சிறிது நேரத்திலேயே டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது. சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 'எச்சரிக்கை சிக்னல்' கிடைத்ததை அடுத்து அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக இண்டிகோ வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. "டெல்லியில் இருந்து டேராடூனுக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் 6E 2134 தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் டெல்லிக்கு திரும்பியது. விமானி நடைமுறைப்படி ஏடிசிக்கு தகவல் அளித்து, அவசர தரையிறக்கத்தைக் கோரினார்." என்று இண்டிகோ நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தது.