'மோக்கா' புயலுக்கு தயாராகுங்கள்: தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு
மே-5 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்கள்-- கடலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், நாகபட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், மயிலாடுதுறை, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், காரைக்கால், தர்மபுரி, கிருஷ்ணகிரி மே-6 மற்றும் மே-7 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. மே-8 மற்றும் மே-9 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
மத்திய வங்கக்கடலில் உருவாக இருக்கும் 'மோக்கா' புயல்
தமிழக கடலோர பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. வரும் 6ஆம் தேதி தென் கிழக்கு வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவும். இந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி 7ஆம் தேதி அன்று ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். அதன் பிறகு, 8ஆம் தேதி அன்று இது ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி, மத்திய வங்கக்கடல் பகுதிக்கு நகர்ந்து ஒரு புயலாக வலுப்பெற வாய்ப்பிருக்கிறது. இதனால், மே-5 முதல் மே-9ஆம் தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆழ் கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மே-7ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.