காங்கிரஸின் மக்களவை தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க வேண்டும் என்று காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 99 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு ராகுல் காந்தியே காரணம் என்று அக்கட்சி தலைவர்கள் நம்புகின்றனர். ராகுல் காந்தியின் இரண்டு யாத்திரைகள் தான் இந்த வித்தியாசத்தை ஏற்படுத்தியது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர். 2019 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வெறும் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ராகுல் காந்திக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவராக அவரை நியமிக்க அக்கட்சி தீர்மானித்துள்ளது.
சாமானியர்களின் குரலாக ராகுல் காந்தி
காங்கிரஸின் மக்களவைத் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க வேண்டும் என்று காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். "ராகுல் காந்தியை காங்கிரஸின் மக்களவைத் தலைவர் ஆக்க வேண்டும் என்பதும், சாமானியர்களின் குரலாக அவர் இருக்க வேண்டும் என்பதும். சாமானியர்களின் பிரச்சினைகளை அவர் நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டும் என்பதும் CWC யின் விருப்பமாக இருந்தது... சில மாநிலங்களில் எங்களுக்கு ஏன் குறைவான இடங்கள் கிடைத்தது என்பது குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம். 'காங்கிரஸ் முக்த்' என்ற அவர்களின் கூற்று தோல்வியடைந்து, நாடு இப்போது மீண்டும் 'காங்கிரஸ் யுக்த்' ஆக மாறியுள்ளது" என்று காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் கூறியுள்ளார்.