NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை பெருங்களத்தூர் சாலையில் கடந்து சென்ற முதலை - வைரல் வீடியோ
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை பெருங்களத்தூர் சாலையில் கடந்து சென்ற முதலை - வைரல் வீடியோ
    சென்னை பெருங்களத்தூரில் சாலையில் கடந்து சென்ற முதலை - வைரல் வீடியோ

    சென்னை பெருங்களத்தூர் சாலையில் கடந்து சென்ற முதலை - வைரல் வீடியோ

    எழுதியவர் Nivetha P
    Dec 04, 2023
    12:37 pm

    செய்தி முன்னோட்டம்

    'மிக்ஜாம்' புயல் காரணமாக சென்னையில் நேற்று(டிச.,3)இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

    பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

    இந்நிலையில் பெருங்களத்தூர்-நெடுங்குன்றம் சாலையில் முதலை ஒன்று சாலையை கடந்து செல்லும் வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது.

    இதனால் அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் அச்சமடைந்துள்ளனர்.

    இதுகுறித்து தற்போது வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு கூறுகையில், 'சென்னையிலுள்ள நீர் ஆதாரங்களில் ஏற்கனவே முதலைகள் உள்ளது. கனமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பப்பெற்றுள்ள காரணத்தினால் ஒரு முதலை வெளியே வந்திருக்கக்கூடும்' என்றும்,

    'வனத்துறை அதிகாரிகள் முதலை நடமாட்டம் குறித்த தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், முதலை தென்பட்டால் பிடிக்கப்பட்டு கொண்டுசெல்லப்படும். எனவே, பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம்' என்றும் கூறியுள்ளார்.

    புயல் 

    இரவு வரை சென்னையில் மழை நீடிக்கும் 

    மேலும் அப்பகுதியிலுள்ள நீர்நிலைகளில் மக்கள் இறங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதே போல் முதலையை கண்டதும் மக்கள் அதனை சீண்டி தொந்தரவு கொடுக்காத வரையில் அதனால் மக்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது என்றும் வனத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.

    இதற்கிடையே சென்னையிலிருந்து மிக்ஜாம் புயலானது 100 கிமீ.,தொலைவில் மையம் கொண்டுள்ள நிலையில், மணிக்கு 10 கிமீ.,வேகத்திற்கு நகர்ந்து தெற்கு ஆந்திரா நோக்கி நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

    தொடர்ந்து, சென்னையில் இன்று இரவு வரை கனமழை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    சென்னையில் பல இடங்களில் புயல் காரணமாக 20 செ.மீ.க்கு மேல் மழை பதிவாகியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

     பெருங்களத்தூர் வைரல் வீடியோ 

    #JUSTIN | சென்னையில் உள்ள பல நீர் ஆதாரங்களில் முதலைகள் ஏற்கனவே உள்ளன. புயல் மழை காரணமாக தண்ணீர் அதிகரித்துள்ளதால் ஒரு முதலை வெளியே வந்துள்ளது. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்

    - சென்னை பெருங்களத்தூர் ஏரி அருகே முதலை சாலையில்… https://t.co/Z0lEKr7gWD

    — Sun News (@sunnewstamil) December 4, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    வனத்துறை
    வானிலை ஆய்வு மையம்
    கனமழை

    சமீபத்திய

    ஆபரேஷன் சிந்தூர்: 35-40 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்தியா அறிவிப்பு இந்தியா
    டிவிஎஸ்ஸின் மலிவு விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகம்; முக்கிய அம்சங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    அவசர காலத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு மீது அரசுக்கு முழு அதிகாரம்; மத்திய அரசு வரைவு சட்டம் வெளியீடு மத்திய அரசு
    இந்திய ஆயுதப்படைகளின் முப்படை செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது இந்தியா

    சென்னை

    ₹100 கோடி பொன்சி மோசடி வழக்கில், நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன் பிரகாஷ் ராஜ்
    'சென்னை பஸ்' செயலியின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்  தமிழ்நாடு
    இளைஞர்களுக்கு ஆண்டுதோறும் முழு உடல் மருத்துவ பரிசோதனை அவசியம் - ககன்தீப் சிங் பேடி தமிழ்நாடு
    கனமழை எதிரொலி - சென்னையில் முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக தகவல் பருவமழை

    வனத்துறை

    அரிக்கொம்பன் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த பால்ராஜ் குடும்பத்திற்கு ₹5 லட்சம் நிவாரணம்!  தமிழ்நாடு
    சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி விருதுநகர்
    நீண்ட போராட்டத்திற்கு பிறகு பிடிபட்டது அரிக்கொம்பன் யானை! தமிழ்நாடு
    அரிக்கொம்பன் யானை, களகாடு வனப்பகுதிக்கு அழைத்து செல்லப்படுகிறது  இந்தியா

    வானிலை ஆய்வு மையம்

    வங்கக்கடலில் உருவாக இருக்கும் 2 புயல்களை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை  இந்தியா
    மிதிலி: வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல் தமிழ்நாடு
    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: IMD  தமிழகம்
    இன்று தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு கனமழை

    கனமழை

    வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுநிலை; தமிழகத்தில் கனமழை பெய்யும் மழை
    7 தமிழக மாவட்டங்களில் அதிகமான கனமழையும், 9 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு  தமிழகம்
    வங்ககடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுநிலை; இரு தினங்களுக்கு தமிழகத்தில் கனமழை! காற்றழுத்த தாழ்வு நிலை
    தமிழகத்தில் கனமழை காரணமாக பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு தேர்வு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025