Page Loader
CoWIN போர்டல்: கொரோனா தடுப்பூசி போட்ட இந்தியர்களின் தரவுகள் கசிவு 
மக்கள் தங்கள் தனிப்பட்ட விவரங்களைப் பதிவுசெய்த CoWIN போர்டல் மூலம் இந்த தரவு கசிவு ஏற்பட்டுள்ளது.

CoWIN போர்டல்: கொரோனா தடுப்பூசி போட்ட இந்தியர்களின் தரவுகள் கசிவு 

எழுதியவர் Sindhuja SM
Jun 12, 2023
01:27 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய குடிமக்களின் ஆதார் அட்டை, பான் கார்டு விவரங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் டெலிகிராம் என்ற செயலி மூலம் கசிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மலையாள மனோரமா வெளியிட்டுள்ள செய்திகளின்படி, மக்கள் தங்கள் தனிப்பட்ட விவரங்களைப் பதிவுசெய்த CoWIN போர்டல் மூலம் இந்த தரவு கசிவு ஏற்பட்டுள்ளது. CoWIN என்பது கொரோனா தடுப்பூசி போடுவதற்காக பொதுமக்கள் உபயோகித்த ஒரு மொபைல் செயலியாகும். இந்நிலையில், டெலிகிராமில் உள்ள ஒரு பாட், ஒருவரது மொபைல் எண்ணை மட்டும் உள்ளிட்டால், அவர்களது அனைத்து விவரங்களையும் கூறிவிடுகிறதாம். இந்த விவரங்களில் பாலினம், பிறந்த ஆண்டு, தடுப்பூசி மையத்தின் பெயர் மற்றும் தடுப்பூசிக்கு பயன்படுத்தப்பட்ட அடையாள அட்டையின் எண் ஆகியவை அடங்கும்.

detaisl

எனது சொந்த தரவு உட்பட அனைத்து இந்தியர்களின் தரவுகளும் பொதுவில் கிடைக்கிறது: எம்பி 

மேலும், கொரோனா தடுப்பூசி கண்காணிப்பு தளமான CoWINனில் பதிவு செய்யப்பட்ட அனைத்து விவரங்களும் டெலிகிராம் செயலியில் கிடைப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இன்று குற்றம் சாட்டியுள்ளது. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் தரவு மீறலின் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்ந்து கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலே, "தடுப்பூசி போடப்பட்ட அனைத்து இந்தியர்களின் மொபைல் எண்கள், ஆதார் எண்கள், பாஸ்போர்ட் எண்கள், வாக்காளர் ஐடி, குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் போன்றவை கசிந்துள்ளன." என்று கூறியுள்ளார். தரவு கசிவு குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், "'டிஜிட்டல் இந்தியா' வெறியில், இந்திய அரசு குடிமக்களின் தனியுரிமையை பரிதாபகரமாக புறக்கணித்துள்ளது." என்று விமர்சித்துள்ளார்.