Page Loader
CoWin போர்டல் பாதுகாப்பானது, பொதுமக்களின் தரவுகள் கசியவில்லை: மத்திய அரசு 
CERT-In, இந்த பிரச்சனை குறித்து ஆராய்ந்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

CoWin போர்டல் பாதுகாப்பானது, பொதுமக்களின் தரவுகள் கசியவில்லை: மத்திய அரசு 

எழுதியவர் Sindhuja SM
Jun 12, 2023
06:02 pm

செய்தி முன்னோட்டம்

CoWIN போர்ட்டலில் உள்ள தரவுகள் முற்றிலும் பாதுகாப்பானது என்றும் இது குறித்து வெளியான செய்திகள் அனைத்தும் "விஷமம் நிறைந்தது" என்றும் மத்திய அரசு இன்று(ஜூன் 12) கூறியுள்ளது. கொரோனா தடுப்பூசி கண்காணிப்பு தளமான CoWINனில் பதிவு செய்யப்பட்ட அனைத்து விவரங்களும் டெலிகிராம் செயலியில் கிடைப்பதாக இன்று காலை தகவல்கள் வெளியாகி இருந்தன. இது குறித்து விவரித்த மத்திய சுகாதார அமைச்சகம், "சுகாதார அமைச்சகத்தின் CoWIN போர்டல் தரவு தனியுரிமைக்கான பாதுகாப்புகளுடன் செயல்படும் முற்றிலும் பாதுகாப்பான செயலியாகும். OTP அங்கீகார அடிப்படையிலான தரவு அணுகல் மட்டுமே வழங்கப்படுகிறது" என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தஜ்ஸ்ப்ச்ஜ்ஸ்

CERT-In இந்த பிரச்சனை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க இருக்கிறது

"அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் முக்கியமான தனிப்பட்ட விவரங்கள் சமூக ஊடக தளமான டெலிகிராமில் கசிந்துள்ளன" என்று 'சவுத் ஆசியா இன்டெக்ஸ்' செய்தி நிறுவனம் இன்று காலை ட்விட்டரில் கூறி இருந்தது. ஆதார், வாக்காளர்-ஐடி, பாஸ்போர்ட் எண்கள் மற்றும் கோவிட்-19 தடுப்பூசிகளைப் பெற்றவர்களின் செல்போன் எண்கள் ஆகியவை CoWINனில் இருந்து கசிந்துவிட்டதாக பல செய்திகள் வெளியாகின. இதற்கு பதிலளித்த மத்திய அரசு, "வலை பயன்பாட்டு ஃபயர்வால், ஆன்டி-DDoS, SSL/TLS, வழக்கமான பாதிப்பு மதிப்பீடு, அடையாளம் மற்றும் அணுகல் மேலாண்மை," போன்ற அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் CoWINனில் இருப்பதாக கூறியுள்ளது. மேலும், கணினி அவசரகால பதிலளிப்பு குழுவான CERT-In, இந்த பிரச்சனை குறித்து ஆராய்ந்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.