மக்களே..கூட்டுறவு அங்காடிகளில் பொங்கல் சிறப்பு தொகுப்புகள் இன்று முதல் விற்பனை
செய்தி முன்னோட்டம்
கூட்டுறவுத்துறை சார்பில் 2025ஆம் ஆண்டுக்கான பொங்கல் சிறப்பு தொகுப்புகள் விற்பனை துவங்கி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் கூட்டுறவு அங்காடிகளில் விற்பனைக்கு கிடைக்கும் இந்த தொகுப்புகள் மூன்று விலைகள் கீழ் விற்கப்படுகிறது.
அவற்றின் விவரங்களை கூட்டுறவு துறை முதன்மைச்செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கினார்.
அவர் கூறியதன்படி, ரூ.199 இனிப்பு பொங்கல் தொகுப்பில் 7 பொருட்கள் விற்கப்படும்- பச்சரிசி, சர்க்கரை, ஏலக்காய், முந்திரி, உலர்திராட்சை, நெய் மற்றும் பாசிப்பருப்பு.
அதேபோல, ரூ.499 கூட்டுறவு சிறப்பு பொங்கல் தொகுப்பில், 19 பொருட்கள் உள்ளன-மஞ்சள் தூள், சர்க்கரை, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, தனியா, புளி, பொட்டுக்கடலை, மிளகாய் தூள், கடலை எண்ணெய், உளுத்தம் பருப்பு, மிளகு, வெந்தயம், சோம்பு, கடுகு, மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு, சீரகம் ஆகியவை.
விவரங்கள்
பொங்கல் தொகுப்புகளின் விவரங்கள்
மூன்றாவது வகையான பெரும் பொங்கல் தொகுப்பு ரூ.999க்கு 35 பொருட்களுடன் விற்கப்படுகின்றன- மஞ்சள் தூள், சர்க்கரை, உப்பு, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பச்சை பட்டாணி, பாசிப்பருப்பு, வெள்ளை கொண்டைக்கடலை, வேர்க்கடலை, பொட்டுக்கடலை, மிளகாய், புளி, தனியா, கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம், சோம்பு, ஏலக்காய், கடலை எண்ணெய், வரகு, சாமை, திணை, ரவை, அவல், ராகி மாவு, கோதுமை மாவு, ஜவ்வரிசி, வறுத்த சேமியா, மல்லித்தூள், சாம்பார் தூள், மிளகாய் தூள், பெருங்காயத்தூள், கைப்பை ஆகியவை தரப்படும்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#WATCH | பொங்கல் சிறப்பு தொகுப்பில் என்னவெல்லாம் இருக்கிறது?
— Sun News (@sunnewstamil) December 18, 2024
-கூட்டுறவு துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம்!#SunNews | #JRadhakrishnan | #Pongal pic.twitter.com/c7gwzhqvSp
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#தகவல்பலகை | கூட்டுறவுத்துறை சார்பில் பொங்கல் சிறப்பு தொகுப்புகள் இன்று முதல் கூட்டுறவு அங்காடிகளில் விற்பனை.
— Sun News (@sunnewstamil) December 18, 2024
₹199 இனிப்பு பொங்கல் தொகுப்பு
பச்சரிசி, வெள்ளம், ஏலக்காய், முந்திரி, உலர்திராட்சை, நெய், பாசிப்பருப்பு என ஏழு பொருட்கள் கொண்டது இனிப்பு பொங்கல் தொகுப்பாகவும்.
₹499… pic.twitter.com/peL9dpQGlV