அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு விசாரணையில் முரண்பாடு: சந்தேகத்தை கிளப்பிய அண்ணாமலை
செய்தி முன்னோட்டம்
"அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு விசாரணை செல்லும் விதம் பல சந்தேகங்களை எழுப்புகிறது," என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு விசாரணை செல்லும் விதம், பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. உயர் கல்வித்துறை அமைச்சர், இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, முதலில் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட பிறகே, பல்கலைக்கழகத்திற்கு தகவல் வழங்கப்பட்டது என்று கூறியுள்ளார்".
"ஆனால், நேற்று மீடியாக்களை சந்தித்த சென்னை போலீஸ் கமிஷனர், பல்கலைக்கழக குழுவினரின் மூலம் போலீசுக்கு புகார் வந்தது என்று கூறினார். இதனால் விசரணையில் முரண்பாடுகள் இருப்பதாக தோன்றுகிறது".
"உண்மையில் யாரைக் காப்பாற்ற முயற்சிக்கின்றது திமுக அரசு? உண்மையில் என்ன நடந்தது?" என்று அவர் கேட்டார்.
யார் அந்த 'சார்'?
குற்றவாளி யாரையோ தொலைபேசியில் அழைத்து 'சார்' என கூறினார்; யார் அவர்?
மேலும் அண்ணாமலை,"பாதிக்கப்பட்ட மாணவி குற்றவாளி தொலைபேசியில் அழைப்பு வந்ததாகவும், 'சார்' என்று கூறி குற்றவாளி பேசியதாகவும் குறிப்பிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த தகவலை மறைக்க முயற்சி செய்யப்படுகிறது".
"இந்தக் குற்றத்தில் தொடர்புடையவர்களிடம் நடவடிக்கை எடுக்கப்படும் வரை பாஜக இதனை விடப்போவதில்லை. பிரச்னையை மடைமாற்றி உண்மையை மறைத்துவிட முயற்சிக்கும் திமுக அரசுக்கு, இந்தக் குற்றத்தில் தொடர்பு இருப்பதாக கருத முடியும்" என்று அறிக்கையில் கூறியுள்ளார்.