மதுரையில் AIIMS கட்டிமுடிக்க இன்னும் 3 ஆண்டுகள் ஆகும் எனத்தகவல்
கடந்த 2016-ஆம் ஆண்டு, இந்தியா முழுவதும் 7 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கே AIIMS மருத்துவமனை தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதற்காக மதுரையில் இடமும் ஒதுக்கப்பட்டு, 2018ஆம் ஆண்டு, ரூ.1,264 கோடி நிதி ஒதுக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. தொடர்ந்து 2019ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். எனினும், இதன் கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கியபாடில்லை. ஆளும் திமுக அரசின் முக்கிய தேர்தல் பிரச்சாரமாகவே இது அமைந்தது எனலாம். மறுபுறம், மதுரை AIIMS திட்டத்தோடு அறிவிக்கப்பட்ட மற்ற மாநிலங்களில், AIIMS துவங்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. இந்நிலையில், தமிழ்நாட்டில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் 2026-ல் தான் நிறைவடையுமென நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதிலளித்துள்ளது.