Page Loader
மக்களவை சபாநாயகர் பதவி: NDA, INDIA கூட்டணி ஒருமித்த கருத்தை எட்டுமா?
சபாநாயகர் பதவிக்கான வேட்புமனு இன்று காலை தாக்கல் செய்யப்படும்

மக்களவை சபாநாயகர் பதவி: NDA, INDIA கூட்டணி ஒருமித்த கருத்தை எட்டுமா?

எழுதியவர் Venkatalakshmi V
Jun 25, 2024
11:06 am

செய்தி முன்னோட்டம்

ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் ஒருமித்த கருத்து எட்டப்பட்ட பிறகு, மக்களவை சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சிகள் வேட்பாளரை நிறுத்தாது என்று இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. லோக்சபா சபாநாயகர் வேட்பாளர் குறித்து ஒருமித்த கருத்தினை ஏற்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தை நடத்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோரை மத்திய அரசு நியமித்தது. முன்னதாக, மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் குறித்து ஒருமித்த கருத்து எட்டப்பட்டால், துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிக்கு போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சபாநாயகர் பதவிக்கு இன்று வேட்புமனு தாக்கல் செய்யப்படவுள்ளது. எனினும் அந்த பதவிக்கு யாரை நியமிக்கவுள்ளனர் என்பது குறித்து தகவல் இல்லை.

ட்விட்டர் அஞ்சல்

சபாநாயகர் பதவி