5 மாநில தேர்தல்களில் வெற்றி பெற காங்கிரஸ் தீவிரம்: ஹைதராபாத்தில் இன்று உயர்மட்ட கூட்டம்
செய்தி முன்னோட்டம்
ஹைதராபாத்தில் இன்று நடைபெற உள்ள மறுசீரமைக்கப்பட்ட காங்கிரஸ் செயற்குழுவின்(CWC) முதல் கூட்டத்தில், 5 மாநிலங்களில் நடக்க இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து விவாதிக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்பதை கார்கே உறுதிப்படுத்தினார்.
இந்த கூட்டம் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
டெல்லிக்கு வெளியே காங்கிரஸின் உயர்மட்ட குழு மூன்று நாட்களுக்கு ஆலோசனை நடத்துவது பல ஆண்டுகளுக்குப் பிறகு இதுவே முதல்முறையாகும்.
டொய்ஜ்வ்க்
தெலுங்கானாவுக்கான 6 வாக்குறுதிகளை அறிவிக்க உள்ள காங்கிரஸ்
இந்த கூட்டத்திற்கான விரிவான திட்டத்தை நேற்று பொதுச் செயலாளர்கள் கே.சி.வேணுகோபால் மற்றும் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் வெளியிட்டனர்.
நாளை மீண்டும் ஒரு CWC கூட்டம் நடைபெற உள்ளது.
நாளைய கூட்டத்தில் காங்கிரஸின் அனைத்து மாநிலக் கட்சித் தலைவர்கள், CLP தலைவர்கள், நாடாளுமன்றக் கட்சி நிர்வாகிகள், மத்திய தேர்தல் குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டு அடுத்து வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தல்கள் குறித்து விவாதிக்க இருக்கிறார்கள்.
மேலும், நாளை காங்கிரஸ் கட்சி ஹைதராபாத் அருகே "மெகா பேரணி" ஒன்றை நடத்தவுள்ளது.
அந்த பேரணியின் போது, தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸின் ஆறு வாக்குறுதிகளை அக்கட்சி அறிவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.