Page Loader
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி: அறிக்கை
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி: அறிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Feb 21, 2025
08:20 am

செய்தி முன்னோட்டம்

காங்கிரஸ் கட்சி தலைவரும், ராஜ்ய சபா MP-யுமான சோனியா காந்தி டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. சேர்க்கைக்கான சரியான நேரம் உடனடியாகத் தெரியவில்லை என்றாலும், சோனியா காந்தி வியாழக்கிழமை காலை அனுமதிக்கப்பட்டதாக ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது. எனினும், அவர் நலமாக உள்ளார், வெள்ளிக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று அவர்கள் தெரிவித்தனர். முன்னதாக சோனியா காந்திக்கு ஏற்கனவே சுவாச பிரச்னை இருப்பதாகவும், இதற்காக வெளிநாடுகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவவ்போது செய்திகள் வெளியான வண்ணம் இருந்ததும் மறுப்பதற்கில்லை. தற்போது சோனியா காந்தி மருத்துவர்கள் குழுவின் கண்காணிப்பில் இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. எனினும் இது குறித்து காங்கிரஸ் தரப்பிலோ, ராகுல் காந்தி தரப்பிலோ எந்த அறிக்கையும் வெளியாகவில்லை

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post