
பொதுமக்கள் கவனத்திற்கு, அண்ணாசாலையில் நான்கு வழி மேம்பால பணிகள் காரணமாக போக்குவரத்து மாற்றம்
செய்தி முன்னோட்டம்
சென்னையின் பிரதான சாலைகளான அண்ணாசாலை, தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை புதிய நான்கு வழி மேம்பால சாலை கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த பணிகள் நெடுஞ்சாலைத் துறையால் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன் காரணமாக கடந்த ஏப்ரல் 20 முதல் 22 வரை சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.
இப்பணிகள் தொடரும் நிலையில், தற்போது அமலில் உள்ள போக்குவரத்து மாற்றம் மே 4, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றம்
போக்குவரத்து மாற்றம் விவரம்
தேனாம்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை நோக்கி செல்லும் வாகனங்கள்: - செனடாப் சாலை → டர்ன்புல்ஸ் சந்திப்பு → சேமியர்ஸ் சாலை (பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாலை) வழியாக நந்தனம் சந்திப்பு சென்று, பின்னர் இடது/வலது புறமாக அண்ணாசாலை வழியாக பயணிக்க வேண்டும்.
சைதாப்பேட்டையிலிருந்து சேமியர்ஸ் சாலை நோக்கி செல்லும் வாகனங்கள்: - நேரடியாக செல்ல தடை, அதற்குப் பதிலாக அண்ணாசாலை → செனடாப் சாலை → பின்னர் சேமியர்ஸ் சாலை வழியே பயணிக்கலாம்.
ஜி.கே.எம் பாலம் - செனடாப் சாலை வழி: இப்பாதை தற்போது ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. காந்தி மண்டபம் சாலையிலிருந்து இப்பாதைக்குள் வாகன நுழைவு இல்லை.
போக்குவரத்து மாற்றம்
போக்குவரத்து மாற்றம் விவரம்
ரத்னா நகர் பிரதான சாலை மற்றும் செனடாப் 1வது தெரு வழிகள்: ரத்னா நகர் பிரதான சாலை செனடாப் சாலையிலிருந்து மட்டும் செல்ல அனுமதி. அண்ணாசாலை → செனடாப் 1வது தெரு வழியாக மட்டும் செல்லலாம். செனடாப் 1வது பிரதான சாலையிலிருந்து அண்ணாசாலை நோக்கி செல்ல முடியாது.
கோட்டூர்புரத்திலிருந்து தேனாம்பேட்டை நோக்கி செனடாப் சாலை வழியாக வரும் வாகனங்கள் தடை செய்யப்பட்டு, மாற்று பாதையாக ஜி.கே.எம் பாலம் சர்வீஸ் சாலை → டர்ன்புல்ஸ் சந்திப்பு → சேமியர்ஸ் சாலை → நந்தனம் சந்திப்பு → அண்ணாசாலை வழியாக செல்லலாம்.
அண்ணாசாலை, செனடாப் சாலை, சேமியர்ஸ் சாலை மற்றும் சுற்றியுள்ள ஒருவழிப் பாதைகளில் வாகன நிறுத்தம் தடைசெய்யப்பட்டுள்ளது.