Loading...
'வெற்றித் தமிழகத்தைப் படைத்திடுவோம்': ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துச் சொன்ன முதல்வர் விஜய்
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துச் சொன்ன முதல்வர் விஜய்

'வெற்றித் தமிழகத்தைப் படைத்திடுவோம்': ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துச் சொன்ன முதல்வர் விஜய்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 19, 2026
09:41 am

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நன்னாளில், தமிழக மக்கள் அனைவருக்கும் முதல்வர் விஜய் தனது ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். நமது வாழ்வின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கும் கருவிகள், வாகனங்கள் மற்றும் நாம் செய்யும் தொழிலை இறைவனாகப் போற்றி மகிழும் நாளே ஆயுத பூஜை என்று தனது X பதிவில் முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார். உழைப்பின் உயர்வையும், தொழிலின் மேன்மையையும் போற்றும் இந்த நன்னாளில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என அவர் வாழ்த்தியுள்ளார். கல்வி, கலை மற்றும் தொழில் எனப் புதிதாகத் தொடங்கும் அனைத்து முயற்சிகளையும் வெற்றியாக்கும் திருநாளாக விஜயதசமி அமைகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

முதல்வர் பதிவு

'வெற்றித் தமிழகத்தைப் படைத்திடுவோம்': முதல்வர் பதிவு

இத்திருநாட்கள் அனைவரின் வாழ்விலும் புதிய நம்பிக்கையையும் வளத்தையும் கொண்டு சேர்க்கட்டும் என்று முதல்வர் விஜய் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நன்மை தரும் புதிய முயற்சிகளை முன்னெடுத்து கல்வியிலும் தொழில் வளர்ச்சியிலும் மேன்மை அடைந்து, அனைவரும் இணைந்து ஒரு 'வெற்றித் தமிழகத்தைப் படைத்திடுவோம்' என்று அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.

ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றியும் அனைவரது வாழ்விலும் நலமும் வளமும் பெருக வேண்டும் என அவர் நல்வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.

தமிழகம் முழுவதும் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள சூழலில் அரசியல் தலைவர்களின் வாழ்த்துகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

ADVERTISEMENT