தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு துவங்கியது: 28 புதிய தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் துவங்கியது. முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ள இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, மற்ற அமைச்சர்கள், தொழிலதிபர்கள் பங்கேற்கின்றனர். இன்றைய மாநாட்டில், 51 ஆயிரத்து 157 கோடி ரூபாய் மதிப்பிலான 28 திட்டங்களுக்கு அடிககல் நாட்டினார். இந்த திட்டங்களால் மொத்தம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 803 பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டங்கள் மூலமாக தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 ட்ரில்லியன் டாலர் நோக்கி செல்லும் என்று தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதற்கிடையே முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 27ம் தேதி, 17 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா செல்ல உள்ளார்.