Page Loader
"ஹேமந்த் சோரன் கைது பழிவாங்கும் நடவடிக்கை": முதல்வர் ஸ்டாலின் காட்டம்
"பா.ஜ.க.வின் பதற்றத்தையும் அதிகார அத்துமீறலையுமே இது காட்டுகிறது" என பதிவிட்டுள்ளார் ஸ்டாலின்

"ஹேமந்த் சோரன் கைது பழிவாங்கும் நடவடிக்கை": முதல்வர் ஸ்டாலின் காட்டம்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 01, 2024
04:37 pm

செய்தி முன்னோட்டம்

ஜார்கண்ட் முதலைமச்சர் ஹேமந்த் சோரனின் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டது, பழி வாங்கும் நடவடிக்கை என காட்டமாக தெரிவித்துள்ளார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜார்க்கண்ட் முதலமைச்சர் மாண்புமிகு ஹேமந்த் சோரன் அவர்களைக் கைது செய்துள்ளது ஒன்றிய பா.ஜ.க அரசின் அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை ஆகும்". "பழங்குடியினத்தைச் சேர்ந்த தலைவர் மீது இப்படி விசாரணை அமைப்புகளை ஏவியிருப்பது அரசியலில் மற்றுமொரு தரந்தாழ்ந்த வீழ்ச்சி. பா.ஜ.க.வின் பதற்றத்தையும் அதிகார அத்துமீறலையுமே இது காட்டுகிறது" என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் ஸ்டாலின். ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், நில மோசடி, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறையினாரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.

ட்விட்டர் அஞ்சல்

கைதை கண்டித்த ஸ்டாலின்