நெல்லை இருட்டு கடை ஹல்வாவை நடந்து சென்று ருசித்த முதல்வர் ஸ்டாலின்
செய்தி முன்னோட்டம்
இரண்டு நாள் அரசுமுறை பயணமாக நேற்று திருநெல்வேலி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு திட்டங்களை துவக்கி வைத்ததோடு, ஒரு ரோடு ஷோ நிகழ்ச்சி மூலம் மக்களிடம் சந்தித்து உரையாடினார்.
அதன் பின்னர் நெல்லையப்பர் கோவில் அருகே அமைந்துள்ள பிரபல இருட்டு கடையில் அல்வா வாங்கி ருசித்து சாப்பிட்டார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
எஸ்கார்ட் வாகனம் சகிதம் தெருவுக்குள் நுழைந்த முதல்வர், சட்டென வண்டியிலிருந்து இறங்கி தானே கடைக்கு நடந்து சென்று அல்வா வாங்கி சாப்பிட்டு விட்டு ருசியாக இருக்கிறது எனவும் பாராட்டினார்.
முதல்வரை கடையின் உரிமையாளரும் அவரது துணைவியாரும் வரவேற்றனர்.
அவர்களிடம் கடையின் பெயர் காரணத்தை கேட்டவர், அல்வா சாப்பிட்டுவிட்டு பார்சல் வாங்கிக்கொண்டும் சென்றார் முதல்வர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#WATCH | நெல்லையில் பிரபலமான இருட்டுக் கடை அல்வா வாங்கி சாப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!#SunNews | @mkstalin | #Tirunelveli pic.twitter.com/ykCPitlWj8
— Sun News (@sunnewstamil) February 6, 2025
நலத்திட்டங்கள்
மாஞ்சோலையில் நலத்திட்ட உதவிகள் அறிவிக்கப்படவுள்ளன
சுற்று பயணத்தின் 2வது நாளான இன்று, முதல்வர் ஸ்டாலின் நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார்.
அதோடு இன்று ரோடு ஷோ மூலம் மக்களையும் சந்திக்கிறார்.
அத்துடன், மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களை சந்தித்து குறைகளை கேட்டு உரையாடுவார் முதலமைச்சர் ஸ்டாலின்.
அதேபோல நேற்று, திருநெல்வேலி சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.11.57 கோடியில், தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களை சீரமைத்து, மேம்படுத்தும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
அதோடு, பாளையங்கோட்டையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்டுள்ள தினசரி சந்தைக் கட்டிடத்தை திறந்து வைத்து, பல்வேறு மேம்பாட்டு பணிகளையும் துவக்கி வைத்தார் முதல்வர்.