மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜியின் இலாகா மாற்றம்
செய்தி முன்னோட்டம்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை செந்தில் பாலாஜியின் பொறுப்பில் இருந்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையை அமைச்சர் முத்துசாமி கூடுதலாக கவனிக்க இருக்கிறார்.
பணமோசடி வழக்கில் நேற்று அமலாக்க துறை தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது.
இதனையடுத்து, செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவ பரிசோதனையில் அவரது இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பது தெரியவந்தது.
அவருக்கு உடனடியாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர்.
ஜட
செந்தில் பாலாஜியை எய்ம்ஸ் மருத்துவர்கள் சோதித்து பார்க்க வேண்டும்: அமலாக்க துறை
இதற்கிடையில், செந்தில் பாலாஜியை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என்ற உத்தரவு நேற்று மாலை பிறப்பிக்கப்பட்டது.
இன்று காலை வெளியான செய்திகளின் படி, செந்தில் பாலாஜியின் இருதயத்தில் 90% அடைப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், அவர் சுயநினைவுடன் தான் இருக்கிறார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
எனினும், அமலாக்க துறை செந்தில் பாலாஜியை கைது செய்ய தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.
செந்தில் பாலாஜியின் உடல்நிலையை எய்ம்ஸ் மருத்துவர்கள் சோதித்து பார்க்க வேண்டும் என்று அமலாக்க துறை கூறியுள்ளது.
மேலும், இந்த வழக்கில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்திருக்கிறது.
இவ்வளவு பிரச்சனைகள் நடந்து வரும் நிலையில், செந்தில் பாலாஜியின் இலாக்காக்களும் மாற்றப்பட்டுள்ளன.