Page Loader
சித்ரா பவுர்ணமி கிரிவலம் - திருவண்ணாமலைக்கு செல்ல 4,500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்! 
திருவண்ணாமலை கிரிவலத்திற்கு 4,500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சித்ரா பவுர்ணமி கிரிவலம் - திருவண்ணாமலைக்கு செல்ல 4,500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்! 

எழுதியவர் Siranjeevi
May 04, 2023
12:00 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் சித்ரா பவுர்ணமி கிரிவலத்திற்கு செல்ல திருவண்ணாமலைக்கு 4, 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலைக்கு கிரிவலம் சுற்ற சித்ரா பவுர்ணமிக்கு பல மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வருவது உண்டு. அதேப்போல், மாத மாதம், பவுர்ணமி நாட்களிலும், கார்த்திகை தீபம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் பல லட்சம் பேர் திருவண்ணாமலை கிரிவலத்திற்கு வருவது உண்டு. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி இன்று மே 4 இல் இரவு 11.59 தொடங்கி மறுநாள் இரவு 11.33 மணி வரை கிரிவலம் செல்ல அனுமதிக்கின்றனர்.

திருவண்ணாமலை கிரிவலம்

திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமி கிரிவலம் - 4,500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

இதனையடுத்து, போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், பக்தர்களின் வசதிக்காக கூடுதலாக ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், அதேபோன்று, சேலம், கோவை, சென்னை மற்றும் மதுரை போன்ற மாவட்டத்திற்கு 1,500 பேருந்துகளும் இயக்க திட்டமிட்டுள்ளது. மேலும், சென்னை கோயம்பேடு, தாம்பரம் பேருந்து நிலையங்களில் சிறப்பு பேருந்துகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 15 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாமும் அமைக்கப்படுகின்றன. எனவே மொத்தமாக வழக்கமான பேருந்துகளுடன் சேர்த்து திருவண்ணாமலைக்கு 4,500 சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.