தெலுங்கானாவில் தமிழ் பள்ளிகள் மூடப்பட்டதால் பாதிப்படைந்த 8 லட்சம் குழந்தைகள்
செய்தி முன்னோட்டம்
தெலுங்கானா மாநிலத்தில் தமிழ்வழி பள்ளிகள் மூடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவிலுள்ள செகந்திராபாத்-ஹைதராபாத் பகுதிகளில் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வசித்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.
அவர்களுக்காக 20க்கும் மேற்பட்ட தமிழ்வழி பள்ளிகள் இயங்கி வந்தது.
இதனிடையே அந்த மாநிலத்தில் தெலுங்கு மொழி பாடம் கட்டாயமாக்கப்பட்டது.
இதன் காரணமாக அங்குள்ள தமிழ்வழி பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
அதனோடு, அங்கு வசிக்கும் தமிழர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களிலும் தமிழ் பாடங்கள் நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக அங்கு வசிக்கும் 8 தமிழர்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளார்கள்.
பள்ளிகள்
தமிழக முதல்வர் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள கோரிக்கை
இந்நிலையில் அங்குள்ள நிலவரம் குறித்து தமிழர் ஒருவர் கூறியுள்ளதாவது, 'தமிழ் ஆசிரியர்களை மட்டும் நியமனம் செய்து விட்டு, தேவையான புத்தகங்கள் மற்றும் எவ்வித ஒத்துழைப்பினையும் மாநில அரசு கொடுக்காமல் தற்போது பள்ளிகளை மூடியுள்ளது' என்று கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து பேசிய அவர், 'தமிழ் மொழி இல்லை என்னும் காரணத்தினால் இந்தி அல்லது சமஸ்கிருதம் பாடத்தினை தேர்வு செய்யவேண்டிய நிலை இங்கு ஏற்பட்டுள்ளது' என்றும்,
'சொந்த ஊர்களுக்கு செல்லும் பொழுது குழந்தைகள் தமிழ் மொழியில் பேசவும், எழுதவும் மிகவும் சிரமப்படுகிறார்கள்' என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, தெலுங்கானாவில் தமிழ்வழி பள்ளிகளை மீண்டும் திறக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பகுதி தமிழர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.