Page Loader
தேர்தலில் வெற்றி பெற்றதற்காக மக்களுக்கு இலவசமாக மதுபானங்களை வழங்கிய பாஜக எம்.பி

தேர்தலில் வெற்றி பெற்றதற்காக மக்களுக்கு இலவசமாக மதுபானங்களை வழங்கிய பாஜக எம்.பி

எழுதியவர் Sindhuja SM
Jul 08, 2024
03:31 pm

செய்தி முன்னோட்டம்

கர்நாடகா: மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, அதை கொண்டாடும் வகையில், கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் பாஜக எம்பி கே.சுதாகர் பொதுமக்களுக்கு இலவசமாக மது பானங்களை வழங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் ஏற்பாடு செய்திருந்த விருந்தில், மது பாட்டிலைப் பெற மக்கள் வரிசையில் காத்திருந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 60,000 க்கும் அதிகமான மக்கள் இதில் கலந்து கொண்டதால் கூட்டத்தை சமாளிப்பது போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்தது. இந்நிலையில், இது குறித்து பேசியிருக்கும் பெங்களூரு ரூரல் எஸ்பி சி.கே.பாபா "கலால் துறை அனுமதி வழங்கியதால், இந்த ஏற்பாடுகளை கவனிக்கும்படி போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது. இதில் போலீஸ் துறையின் தவறு இல்லை. அனுமதி வழங்குவது கலால் துறையின் பொறுப்பு" என்று தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

மக்களுக்கு இலவச மதுபானங்களை வழங்கிய பாஜக எம்.பி