Page Loader
டிஸ்னி லேண்ட் போல சென்னை புறநகரில் விரைவில் தீம் பார்க்: தமிழக அரசு 
சென்னை புறநகரில் விரைவில் தீம் பார்க்!

டிஸ்னி லேண்ட் போல சென்னை புறநகரில் விரைவில் தீம் பார்க்: தமிழக அரசு 

எழுதியவர் Venkatalakshmi V
Sep 26, 2023
04:17 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக அரசின் சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, சென்னையின் புறநகர் பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் ஒரு தீம் பார்க் அமைக்க போவதாக அறிவித்துள்ளது. இந்த தீம் பார்க், அமெரிக்காவில் உள்ள டிஸ்னி லேண்ட் போல அமையவுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி, இந்த தீம் பார்க் அமைப்பதற்கு, தனியார் நிறுவனங்களுடன் 'ஜாயிண்ட் வென்ச்சர்'-க்கு டெண்டர் விடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தீம் பார்க் கட்டிமுடிக்க 5 ஆண்டுகள் ஆகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி தீம் பார்க் அமையும் பட்சத்தில், MGM, VGP, கிஷ்கிந்தா, குயின்ஸ் லேண்ட் வரிசையில், சென்னையில் அமையவுள்ள ஐந்தாவது தீம் பார்க் இதுவாகும். எனினும் இந்த தீம் பார்க் அமையவுள்ள இடம் பற்றி தகவல் இல்லை.

embed

தீம் பார்க்

#BREAKING | சென்னை புறநகரில் தீம் பார்க் அமைக்கும் தமிழ்நாடு அரசு#SunNews | #ThemePark | #TNGovt | #Chennai pic.twitter.com/6mXr6r5TNq— Sun News (@sunnewstamil) September 26, 2023