Page Loader
சென்னை பள்ளிகளுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி: சென்னை பெருநகர கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா
இந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என சென்னை பெருநகர கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார்

சென்னை பள்ளிகளுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி: சென்னை பெருநகர கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா

எழுதியவர் Venkatalakshmi V
Feb 08, 2024
07:03 pm

செய்தி முன்னோட்டம்

சென்னையில் உள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். மேலும் இந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தீவிர சோதனைக்கு பிறகு உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா நகர், பாரிஸ் கார்னர், ஆர்.ஏ. புரம், கோபாலபுரம் மற்றும் முகப்பேர் ஆகிய இடங்களில் செயல்படும் தனியார் பள்ளிகளான- சென்னை பப்ளிக் ஸ்கூல், செட்டிநாடு வித்யாஷ்ரம் உள்ளிட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனை அடுத்து பள்ளி வளாகத்திற்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய், மெட்டல் டிடெக்டர் உதவியுடன் சோதனை செய்தனர்.

வெறும் புரளி

மர்ம நபரை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து தேடுதல் 

இது குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, மிரட்டல் குறித்து காலை 10:30 மணி அளவில் முதல் தகவல் கிடைத்ததாகவும், உடனடியாக சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு Bomb Detection and Deactivation Squad அனுப்பப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும், இது குறித்து பொது மக்கள் யாரும் பதற்றமடைய தேவையில்லை என கூறினார். மெயில் அனைத்தும் ஒரே இ-மெயில் ஐ.டி.யில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், வெடிகுண்டு மிரட்டல் குறித்து விசாரித்ததில் அது ஒரு புரளி என தெரியவந்துள்ளதாகவும், இ-மெயில் அனுப்பிய நபரை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த வெடிகுண்டு மிரட்டல் தேர்வு பயத்திற்காக விடுக்கப்பட்டதை போல தெரியவில்லை எனவும் தெரிவித்தார்.