Page Loader
சென்னையில் உள்ள பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் 
பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் 

எழுதியவர் Venkatalakshmi V
Feb 08, 2024
01:44 pm

செய்தி முன்னோட்டம்

சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பள்ளி வளாகத்திற்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய், மெட்டல் டிடெக்டர் உதவியுடன் சோதனை செய்து வருகின்றனர். மேலும், பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, பள்ளி குழந்தைகளை பெற்றோர் அழைத்து செல்லுமாறும் பள்ளிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக, பெற்றோர்கள் பள்ளி வாசலில் பதட்டத்துடன் காணப்பட்டனர். சென்னை அண்ணா நகர், பாரிஸ் கார்னர், ஆர்.ஏ. புரம், கோபாலபுரம் மற்றும் முகப்பேர் ஆகிய இடங்களில் செயல்படும் தனியார் பள்ளிகளான- சென்னை பப்ளிக் ஸ்கூல், செட்டிநாடு வித்யாஷ்ரம் உள்ளிட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது

embed

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

#BREAKING | சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு!#SunNews | #Chennai | #PrivateSchools pic.twitter.com/NEARf0ZZVr— Sun News (@sunnewstamil) February 8, 2024