Page Loader
சென்னையில் நடைபெறவுள்ள பெரும் மாற்றம்: தீவுத்திடலுக்கு மாறும் பிராட்வே பேருந்து நிலையம்
Multi Model Integration என்ற போக்குவரத்து முனையம் அமைக்க இருப்பதனால், இந்த தற்காலிக மாற்றம்

சென்னையில் நடைபெறவுள்ள பெரும் மாற்றம்: தீவுத்திடலுக்கு மாறும் பிராட்வே பேருந்து நிலையம்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 30, 2024
06:36 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை நகருக்குள் செயல்பட்டு வரும் முக்கிய பேருந்து நிலையமான பிராட்வே பேருந்து நிலையத்தைத் தற்காலிகமாகத் தீவுத் திடலுக்கு இடமாற்றம் செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. பிராட்வே பேருந்து நிலையத்தை, மல்டி மாடல் இன்டகிரேஷன்(Multi Model Integration) என்ற போக்குவரத்து முனையம் அமைக்க இருப்பதனால், இந்த தற்காலிக மாற்றம் செய்யப்படுகிறது எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தற்காலிக மாற்றத்திற்காக தீவுத்திடலில் சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.5 கோடி செலவில் அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளது. இந்த அடிப்படை கட்டிடம் அமைக்கப்பட்ட பின்னர், பிராட்வே பேருந்து நிலையம் தீவுத்திடலுக்கு இடமாறும். மறுபக்கம் பிராட்வே பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு 9 மாடிகள் கொண்ட வணிக வளாகத்துடன் கூடிய மாடர்ன் பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

இடம் மாறும் பிராட்வே பேருந்து நிலையம்