NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் - காவல்துறை தீவிர சோதனை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் - காவல்துறை தீவிர சோதனை 
    சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் - காவல்துறை தீவிர சோதனை

    சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் - காவல்துறை தீவிர சோதனை 

    எழுதியவர் Nivetha P
    Dec 28, 2023
    02:34 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை மெரினா கடற்கரை அருகே காமராஜர் சாலையில் அமைந்துள்ள தமிழக காவல்துறை தலைமை இயக்குனர்(டிஜிபி) அலுவலகத்திற்கு நேற்று(டிச.,27) மாலை ஓர் மின்னஞ்சல் வந்துள்ளது.

    அந்த மின்னஞ்சலில் சென்னை முழுவதும் சுமார் 30 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என்றும்,

    அதில் முதல் குண்டு பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் தான் வெடிக்கவுள்ளது என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    பெசன்ட் நகர் கடற்கரையில் 2500 கிலோ வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து, வெடிகுண்டு வைத்திருக்கும் மீதி இடங்களின் விவரங்கள் குறித்து தெரிய வேண்டுமெனில் 2,500 பிட்காயின்களை தனக்கு அனுப்ப வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    மிரட்டல் 

    மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு டிடக்டர்கள் கொண்டு சோதனை 

    இந்த மின்னஞ்சலை சாதாரணமாக கருத வேண்டாம் என்றும், பிட்காயின்கள் கொடுக்கப்படாவிட்டால் நிச்சயம் சென்னையில் குண்டுவெடிப்பு நடக்கும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நபரின் பெயர் செந்தில் என்று அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே இந்த மின்னஞ்சலை கண்டு அதிர்ந்த டிஜிபி அலுவலக காவலர்கள் தங்கள் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    அதன்படி வெடிகுண்டு நிபுணர்கள் உடனடியாக மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு டிடக்டர்களோடு எலியட்ஸ் கடற்கரை முழுவதும் சோதனை செய்துள்ளனர்.

    இந்த சோதனையில் எவ்வித வெடிகுண்டும் கிடைக்கவில்லை.

    தேடுதல் 

    வதந்தியை பரப்பிய நபர் யார்? என கண்டறியும் பணியில் சைபர் கிரைம் ஈடுபாடு 

    இந்நிலையில் சென்னை முழுவதும் மக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் சோதனை மேற்கொள்ள ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

    இதுமட்டுமில்லாமல் அனைத்து காவல் நிலையத்திற்கும் இதுகுறித்து தெரிவித்து உஷார் நிலையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டது.

    காவல்துறை கண்காணிப்புகள் அதிகரிக்கப்பட்டதோடு, வாகன சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டது.

    இதன் காரணமாக நேற்று இரவு முழுவதும் சென்னையில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.

    இதனை தொடர்ந்து தற்போது இந்த வதந்தியை பரப்பிய நபர் யார்? என்று கண்டறியும் பணியில் சைபர் கிரைம் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    கடற்கரை பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனை 

    #JUSTIN சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு
    வைத்திருப்பதாக தகவல்...! #News18tamilnadu |https://t.co/7dpn9FD15R pic.twitter.com/CEUUnOnRW9

    — News18 Tamil Nadu (@News18TamilNadu) December 27, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    குண்டுவெடிப்பு
    கடற்கரை
    சைபர் கிரைம்

    சமீபத்திய

    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்
    கூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி யுபிஐ
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி

    சென்னை

    தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு  கனமழை
    மெட்ரோவில் சிங்கார சென்னை அட்டைகளை பயன்படுத்தும் பயணிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படும் என அறிவிப்பு  மெட்ரோ
    "இது புதிர் அல்ல"- தளபதி68 தலைப்பு குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அப்டேட் விஜய்
    மீட்பு பணிகள் குறித்து விமர்சித்தவர்களுக்கு, இயக்குனர் மாரி செல்வராஜ் நெத்தியடி உதயநிதி ஸ்டாலின்

    குண்டுவெடிப்பு

    உணவு பற்றாக்குறை, இருளில் மூழ்கிய காஸா - ஹமாஸ் படைக்கு குறிவைத்த இஸ்ரேல் இஸ்ரேல்
    500 பேரை பலி கொண்ட காசா மருத்துவமனை தாக்குதல்  இஸ்ரேல்
    கேரளாவில் தொடர் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி, 20க்கும் மேற்பட்டோர் காயம் கேரளா
    கேரளாவில் நடந்த கிறிஸ்தவ கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு: கேரள முதல்வரை தொடர்பு கொண்டார் அமித்ஷா   கேரளா

    கடற்கரை

    கருணாநிதி நினைவிடத்தில் ரூ.80 லட்ச செலவில் அருங்காட்சியகம்-கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி கருணாநிதி
    ராமேஸ்வர கடற்கரையில் பொட்டலமாக கரை ஒதுங்கிய 20 கிலோ கஞ்சா பறிமுதல் ராமேஸ்வரம்
    திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் நாட்டு வெடிகுண்டு கண்டெடுப்பு - போலீஸ் மறுப்பு திருச்செந்தூர்
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் ராமநாதபுரம்

    சைபர் கிரைம்

    சர்வதேச 'Standup against Bullying' தினம்: ஆண்டுதோறும் இரண்டு முறை கொண்டாடப்படுவது எதனால்? மன ஆரோக்கியம்
    இராணுவ அதிகாரிகள் இந்தியாவில் உட்பட 16.80 கோடி பேரின் தகவல்கள் திருட்டு! தொழில்நுட்பம்
    ஆன்லைன் மோசடி.. ரூ.12.85 லட்சத்தை இழந்த மென்பொறியாளர்!  தொழில்நுட்பம்
    அரசு இணையதளங்கள் மீது இணையத் தாக்குதல்.. மத்திய அரசு எச்சரிக்கை!  தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025