Page Loader
11 தமிழக மாவட்டங்களில் இன்று கொட்டி தீர்க்க போகும் கனமழை
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பதிவாகி இருக்கிறது

11 தமிழக மாவட்டங்களில் இன்று கொட்டி தீர்க்க போகும் கனமழை

எழுதியவர் Sindhuja SM
Oct 17, 2023
05:19 pm

செய்தி முன்னோட்டம்

தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, அக்டோபர் 17 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் அநேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமாரி, தென்காசி அக்டோபர் 18 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. அக்டோபர் 19 முதல் அக்டோபர் 23 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

klwna

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யலாம். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும்.