Page Loader
10 தமிழக மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பதிவாகி இருக்கிறது

10 தமிழக மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

எழுதியவர் Sindhuja SM
Sep 30, 2023
02:55 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக, செப்டம்பர் 30 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- கோவை, நெல்லை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமாரி, தென்காசி, திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம் அக்டோபர் 1 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. அக்டோபர் 2 முதல் அக்டோபர் 6 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

ட்ஜகஃவ்க்

சென்னையின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யலாம்

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யலாம். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும்.