
டெல்லியில் நடைப்பயிற்சி சென்ற தமிழக எம்பி சுதாவிடம் நகை பறிப்பு!
செய்தி முன்னோட்டம்
டெல்லியில் தனது அலுவலக இல்லம் அருகே நடைபயிற்சி மேற்கொண்டிருந்த மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி., சுதாவிடம் 4 சவரன் நகையை மர்மநபர்கள் பறித்து கொண்டு தப்பி ஓடியுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது தலைநகர் டெல்லியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதற்காக அனைத்து மாநில எம்.பி.,க்களும் டெல்லியில் தங்கி உள்ளனர். அவர்கள் மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்று தங்களின் தொகுதிகளுக்கு தேவையான கோரிக்கைகள் குறித்து விவாதம் நேரத்தில் முன் வைத்து வருகின்றனர். இந்நிலையில் தான் இன்று டெல்லியில் நடைபயிற்சி மேற்கொண்ட போது, எம்பி சுதாவிடம் ஹெல்மெட் அணிந்தபடி வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். தலைநகரில் எம்.பி.,யிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | டெல்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு - காவல் நிலையத்தில் புகார்
— Sun News (@sunnewstamil) August 4, 2025
இச்சம்பவத்தின் போது எம்.பி. சுதாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது#SunNews | #ChainSnatching | #Delhi | @AdvtSudha pic.twitter.com/UTPQElbRVN