பல நூற்றாண்டுகள் பழமையான சிவலிங்கம், விஷ்ணு சிலை கர்நாடக ஆற்றுப்படுகையில் கண்டெடுப்பு
செய்தி முன்னோட்டம்
தெலுங்கானா-கர்நாடகா எல்லைக்கு அருகே உள்ள கிருஷ்ணா நதிக்கரையில் இருந்து பல நூற்றாண்டுகள் பழமையான ஒரு விஷ்ணு சிலை மற்றும் ஒரு சிவலிங்கம் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் பாலம் கட்டும் பணி நடைபெற்று கொண்டிருந்த போது அந்த சிலைகள் மீட்க்கப்பட்டன.
அந்த சிலைகள் 1,000 ஆண்டுகள் பழமையானவை என்று நம்பப்படுகிறது.
அந்த விஷ்ணு சிலை மற்றும் சிவலிங்கம் தற்போது இந்திய தொல்லியல் துறையின் (ASI) வசம் உள்ளது.
புதிதாக கண்டெடுக்கப்பட்ட விஷ்ணு சிலை, அயோத்தி ராமர் கோவிலில் புதிதாக நிறுவப்பட்ட ராமர் சிலையின் அம்சத்தை ஒத்திருக்கிறது.
அயோத்தியில் நிறுவப்பட்ட ராமர் சிலையை செதுக்கியவரும் கர்நாடகாவை சேர்ந்த ஒரு சிற்பி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
பழமையான சிலைகள் கர்நாடகாவில் கண்டெடுப்பு
An ancient idol of Lord Vishnu and Shivling was unearthed from the Krishna river at a village in Karnataka's Raichur district.
— Anshul Saxena (@AskAnshul) February 6, 2024
The idols are said to be from 11th century Kalyana Chalukyas dynasty. pic.twitter.com/Svb9hVhEei