Page Loader
உள்ளடக்கங்கள் மீது ஓடிடி தளங்களின் சுய மதிப்பீட்டை வேண்டும் மத்திய அரசின் புதிய 'ஒளிபரப்புச் சட்டம்'
உள்ளடக்கங்கள் மீது ஓடிடி தளங்களின் சுய மதிப்பீட்டை வேண்டும் மத்திய அரசின் புதிய 'ஒளிபரப்புச் சட்டம்'

உள்ளடக்கங்கள் மீது ஓடிடி தளங்களின் சுய மதிப்பீட்டை வேண்டும் மத்திய அரசின் புதிய 'ஒளிபரப்புச் சட்டம்'

எழுதியவர் Prasanna Venkatesh
Nov 11, 2023
10:51 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களை தணிக்கை செய்வதற்கென தனி தணிக்கைக் குழு இருக்கும் நிலையில், ஓடிடி தளங்களில் வெளியிடப்படும் உள்ளடக்கங்களுக்கு தனியாக தணிக்கை குழு ஒன்று இல்லை. இதன் காரணமாக, திரையரங்கில் வெளியிட முடியாத காட்சிகளையும் கோர்த்து ஓடிடியில் வெளியிடுகின்றனர் பெரும்பாலான திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள். மேலும், ஓடிடி தளங்களில் சமீப காலங்களில் நிறைய உள்ளடக்கங்கள் மக்களின் உணர்ச்சிகளை காயப்படுத்தும் விதமாக இருப்பதாகக் கூறி பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், ஓடிடி தளங்களில் வெளியிடப்படும் உள்ளடக்கங்களை மேற்பார்வையிடவும் அதனை ஒரு ஒழுங்குமுறைக்குள் கொண்டு வரவும் புதிய ஒளிபரப்புப் சட்ட வரைவு ஒன்றை உருவாக்கியிருக்கிறது மத்திய அரசு. அந்த வரைவை மக்களின் கருத்துக்களைக் கேட்பதற்காக தற்போது வெளியிட்டும் இருக்கிறது.

ஓடிடி

மத்திய அரசின் புதிய ஒளிபரப்புச் சட்டம்: 

புதிய சட்ட வரைவில் குறிப்பிட்டுள்ளதன் படி, டிஸ்னி, அமேசான் மற்றும் நெட்ஃபிலிக்ஸ் போன்ற ஓடிடி தளங்கள், தங்களுடைய உள்ளடக்கங்களை மேற்பார்வையிட தாங்களே ஒரு குழுவை அமைத்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளடக்க மதிப்பீட்டுக் குழு என அழைக்கப்படும் இந்த குழுவில் பல்வேறு படிநிலைகளைச் சேர்ந்த மக்களும் இடம்பெற வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த குழுவை அமைப்பதற்கான வழிகாட்டுதல்களையும் வழங்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த குழுவின் மதிப்பீட்டைத் தொடர்ந்த உள்ளடக்கங்கள் ஓடிடி தளங்களில் வெளியாக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓடிடி தளங்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் தங்களுடைய உள்ளடக்கங்களை தாங்களே மதிப்பிட்டுக் கொள்ள வேண்டுகிறது இந்தப் புதிய சட்டம். மேலும், எந்தவொரு இணையதள உள்ளடக்கத்தையும் ஒழுங்குபடுத்தும் அதிகாரத்தையும் மத்திய அரசுக்கு இந்த சட்டம் வழங்குவது குறிப்பிடத்தக்கது.