
முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் சிங் கோவிந்த் தலைமையில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குழு அமைப்பு
செய்தி முன்னோட்டம்
2014 தேர்தல் வாக்குறுதியில் ஒன்றான 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குறித்த முக்கிய நகர்வை மத்திய அரசு எடுத்துள்ளது.
இதுபற்றி ஏற்கனவே பல தருணங்களில் ஆளும் மத்திய அரசும், பிரதமர் மோடியும் பேசி வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று, செப்டம்பர் 18 முதல் 22 ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது.
இந்த சிறப்பு கூட்டத்தொடரில் நோக்கம் என்ன என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில், தற்போது இந்த செய்தி வெளியாகியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் சிங் கோவிந்த் தலைமையில் ஒரு குழு, 'ஒரே நாடு, ஒரே தேர்தல்'-ஐ நடைமுறை படுத்த ஒரு அறிக்கையை தயார் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
card 2
1967 வரை நடைமுறையில் இருந்த 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறை
இதுவரை எந்த மத்திய அரசின் நிர்வாகியும் இது குறித்து பேசவில்லை என்றாலும், இது பற்றிய மசோதா இந்த சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.
ஓவ்வொரு மாநிலத்திற்கும் தனி தனியாக தேர்தல் வைப்பதால் செலவுகள் அதிரிப்பதாக மத்திய அரசு கூறியிருந்தது.
ஏற்கனவே, இந்தியாவில், 1967 வரை 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறை நடைமுறையில் இருந்தது. ஆனால், இடையில் பல மாநிலங்களில் இடையிலேயே ஆட்சிகள் கலையவே, இந்த நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி, அப்போதைய மத்திய அரசும், 1971 -இல் இடையிலேயே ஆட்சி கலைந்ததால், தனி தனி தேர்தல்களை நாடு சந்திக்க தொடங்கியது.