
சென்னையில் விரைவில் குழாய் மூலம் கேஸ் விநியோகம்: மத்திய அரசு ஒப்புதல்
செய்தி முன்னோட்டம்
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு (PNG) விநியோகிக்கும் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையின்படி, சென்னை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
முதல் கட்டமாக, அடையாறு, திருவான்மியூர், சேப்பாக்கம், ராயபுரம், பாரிமுனை, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் மற்றும் எண்ணூர் பகுதிகளில் வீடுகளுக்கு நேரடியாக குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்யப்படும்.
பின்னர், திட்டம் நகரின் பிற பகுதிகளுக்கும் விரிவடையும். மொத்தம் 466 கிலோமீட்டர் நீளத்திற்கு குழாய் இணைக்கப்படும் இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.48 கோடி.
'Torrent Gas' நிறுவனம் இதை செயல்படுத்த உள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி#SunNews | #GasPipeline | #Chennai pic.twitter.com/09iq0glKBh
— Sun News (@sunnewstamil) April 18, 2025