Page Loader
ரேடியோக்களில் விளம்பரங்களை ஒளிபரப்பு செய்வதற்கான அடிப்படை விலையை உயர்த்திய மத்திய அமைச்சகம்
ரேடியோக்களில் விளைம்பரங்களை ஒளிபரப்பு செய்வதற்கான அடிப்படை விலையை உயர்த்திய மத்திய அமைச்சகம்

ரேடியோக்களில் விளம்பரங்களை ஒளிபரப்பு செய்வதற்கான அடிப்படை விலையை உயர்த்திய மத்திய அமைச்சகம்

எழுதியவர் Prasanna Venkatesh
Oct 10, 2023
01:19 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் தனியார் FM ரேடியோ ஸ்டேஷன்களில் மத்திய அரசு திட்டங்கள் குறித்து விளம்பரம் செய்வதற்கான அடிப்படை விலையை உயர்த்தியிருக்கிறது மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம். கடைசியாக 2015ம் ஆண்டு இந்த விலைகளில் மாற்றம் செய்யப்பட்ட பிறகு, ஏழு ஆண்டுகள் கழித்து தற்போது தான் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப ரேடியோ விளம்பர அடிப்டை விலைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இந்த விலையில் எந்தளவிற்கு மாற்றம் செய்யலாம் என்பது குறித்த பரிந்துரையை வழங்க, கடந்தாண்டு விலை நிர்ணய குழு ஒன்றையும் அமைத்திருந்தது தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம். தனியார் FM ரேடியோ ஸ்டேஷன்களுடன் தொடர்புடைய பல்வேறு பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து புதிய விலை நிர்ணய பரிந்துரை ஒன்றிய அமைச்சகத்திற்கு அளித்திருக்கிறது விலை நிர்ணய குழு.

ரேடியோ

புதிய விலைப் பட்டியல்: 

அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே புதிய அடிப்படை விலையை நிர்ணயம் செய்திருக்கிறது மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம். அதனடிப்படையில், ரேடியோவில் பத்து நொடிகள் ஒளிபரப்பாகும் விளம்பரத்திற்கு ரூ.52 நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இது ரூ.74 (43%) ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த அடிப்படை விலையின் அடிப்படையில், மத்திய அமைச்சகத்தின் வழிமுறையைப் பின்பற்றி ஒவ்வொரு நகரங்களிலும் ரேடியா பயனாளர்களின் அடிப்படையில் விளம்பர விலையை நிர்ணயம் செய்யவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தியா முழுவதும் மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த அறிவிப்புகளானது அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய ரேடியோக்களே மிகவும் உகந்த வழியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.