Page Loader
சென்னை மெரினாவில் பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி 
சென்னை மெரினாவில் பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி

சென்னை மெரினாவில் பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி 

எழுதியவர் Nivetha P
Jun 22, 2023
04:18 pm

செய்தி முன்னோட்டம்

முன்னாள் முதல்வரும் திமுக கட்சி தலைவருமான கருணாநிதி அவர்களுக்கு சென்னை மெரினா கடற்கரை பகுதியில் ஏற்கனவே ஓர் நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. எனினும், கடலுக்குள் 134 அடி உயரத்திற்கு பேனா நினைவு சின்னம் ஒன்றினை ரூ.81 கோடி செலவில் அமைக்க திமுக அரசு திட்டம் வகுத்தது. இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், இதன் கட்டுமானப்பணிகளை ஒருங்கிணைக்க சிறப்பு அதிகாரியாக ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் விஸ்வநாதன் தமிழக அரசால் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், சற்று முன்னர் இந்த நினைவு சின்னத்தினை அமைக்க மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் 15 நிபந்தனைகளுடன் அனுமதியினை வழங்கியுள்ளது. அனைத்து அனுமதிகளும் கிடைத்துள்ள நிலையில், இதற்கான பணிகளை தமிழக-அரசு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

பேனா நினைவு சின்னத்திற்கு அனுமதி