
இன்று முதல் CBSE பள்ளிகளில் கட்டாய தேர்ச்சி ரத்து: 3, 5 மற்றும் 8ம் வகுப்பில் மதிப்பெண் குறைந்தால் 'பெயில்'
செய்தி முன்னோட்டம்
இந்த ஆண்டுமுதல், 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் மாணவர்கள் தேர்ச்சி பெறத் தேவையான மதிப்பெண்களை பெறவில்லை என்றால், அவர்களை 'பெயில்' ஆக்கும் நடைமுறை CBSE பள்ளிகளில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
முன்னதாக, கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ், 8 ஆம் வகுப்பு வரை பெயில் இல்லை என்ற விதி நடைமுறையில் இருந்தது.
இந்த நிலையில், ஒன்றிய கல்வி அமைச்சகம், கடந்த ஜனவரி 15 ஆம் தேதி, பழைய சட்டத்தின் 16 மற்றும் 38வது விதிகளை திருத்தி, தேர்ச்சி பெறவில்லை என்றால் பெயில் என்ற நடைமுறையை மீண்டும் கொண்டுவந்தது.
இந்த புதிய நடைமுறை குறித்து கடந்த மார்ச் 18ஆம் தேதி, பள்ளிகளுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
விதிகள்
புதிய நடைமுறையில் அமல்படுத்தப்படும் விதிகள் என்ன?
மாணவர்கள் ஆண்டு இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்க வேண்டும்.
மீண்டும் தேர்வில் வெற்றி பெறாத மாணவர்களை மட்டும் அதே வகுப்பில் மீண்டும் படிக்க அனுமதிக்கலாம்.
குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் பெயிலாக்கப்படுவதற்கான பெற்றோர் ஒப்புதல் கடிதம் பெறப்பட வேண்டும்.
இந்த நடைமுறை, தேசிய கல்விக் கொள்கையில் செய்யப்பட்ட மாற்றங்களின் ஒரு பகுதியாக அமையும்.
புதிய விதிமுறையின் கீழ், 3ஆம், 5ஆம் மற்றும் 8ஆம் வகுப்புகளில் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களை பெயில் ஆக்க முடியும்.
தற்போது, மாணவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் பெயிலாக்கப்படும் நடைமுறை சிபிஸ்இ பள்ளிகளில் அதிகாரப்பூர்வமாக செயல்படத் தொடங்கியுள்ளது.