
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நகைகள் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்: சிபிஐ நீதிமன்றம் உத்தரவு
செய்தி முன்னோட்டம்
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடமே ஒப்படைக்க வேண்டுமென சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக கடந்த 1996ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் தங்க, வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள், கைக் கடிகாரங்கள் போன்றவை, நீதிமன்ற காவலில், பெங்களூரு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கு விசாரணை பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெற்றதால் பறிமுதல் செய்யப்பட்ட நகை உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் அங்குள்ள கருவூலத்தில் வைக்கப்பட்டன.
இதனிடையே 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா உடல்நலக் குறைவால் காலமானதால், அவர் குற்றவாளி என உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததாலும், நகைகள் அங்கேயே இருந்தன.
card 2
ஜெ. தீபா தொடர்ந்த வழக்கு
இதனிடையே ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட வேண்டுமென சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
மறுபுறம், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களில் தனக்கு உரிமை உண்டு எனவும், அவற்றை தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கினை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம்,"நகைகளை ஏலம் விடுவதற்குப் பதிலாக, தமிழக அரசின் உள்துறை மூலமாக தமிழகத்துக்கு மாற்றுவது நல்லது என்று நான் கருதுகிறேன். ஆகவே, தமிழக அரசு செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரியை நியமித்து அவர் மூலமாக போலீஸாருடன் இணைந்து நகைகளை பெற்றுக்கொள்ள வருமாறு உத்தரவிடுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
ஜெயலலிதாவின் நகைகள் தமிழக அரசிடம் ஒப்படைக்க உத்தரவு
#BREAKING | ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க ஆணை! #SunNews | #Jayalalithaa pic.twitter.com/PcbWHQ5ejp
— Sun News (@sunnewstamil) January 23, 2024