Page Loader
திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம்: CBCIDயின் FIR அறிக்கை வெளியீடு 
குற்றம் சாட்டப்பட்ட IPS அதிகாரி பல்வீர் சிங்

திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம்: CBCIDயின் FIR அறிக்கை வெளியீடு 

எழுதியவர் Venkatalakshmi V
Apr 24, 2023
05:27 pm

செய்தி முன்னோட்டம்

திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திர உதவி காவல்துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் இருந்து வந்த நிலையில், அம்பாசமுத்திரம் கோட்ட காவல்துறையில் இவர் பொறுப்பேற்றார். இவர் காவல் நிலையத்திற்கு சிறிய குற்றங்களுக்காக விசாரணைக்கு அழைத்து வருவோரின் பற்களை பிடுங்கி தண்டனை அளித்துவருகிறார் என்று புகார்கள் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பல்வீர் சிங் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து அண்மையில் பல்வீர் சிங் மீது, திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது என்று தகவல்கள் வெளியானது. அவர் மீது பல பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், வழக்கின் விசாரணை, சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, CBCID அதிகாரிகள் விசாரணையில் இறங்கி, தற்போது பல்வீர் சிங் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

FIR பதிவு செய்த CBCID