Page Loader
பள்ளி மாணவனை தாக்கிய பாஜக எம்பியின் மகன்: வீடியோ வைரல்
நான் தவறாக நடந்து கொண்டதால் பகீரத் என்னை அடித்தான். ஆனால், இப்போது நாங்கள் நண்பர்கள் ஆகிவிட்டோம்: ஸ்ரீராம்

பள்ளி மாணவனை தாக்கிய பாஜக எம்பியின் மகன்: வீடியோ வைரல்

எழுதியவர் Sindhuja SM
Jan 19, 2023
08:31 am

செய்தி முன்னோட்டம்

ஹைதராபாத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சக மாணவரை தாக்கியதாக தெலுங்கானா பாஜக தலைவர் பாண்டி சஞ்சய் குமாரின் மகன் மீது நேற்று(ஜன:17) வழக்கு பதிவு செய்யப்பட்டது. குமாரின் மகன் பாண்டி பகீரத் சாய் படிக்கும் மஹிந்திரா பல்கலைக்கழகம் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கல்லூரி வளாகத்தில் பகீரத், ஸ்ரீராமைத் திரும்பத்திரும்ப அறைவதை வைரலான அந்த வீடியோ காட்டுகிறது. இன்னொரு வீடியோ, பகீரத்துடன் சேர்ந்து 5-6 நபர்கள் ஸ்ரீராமை தாக்குவது போல் இருக்கிறது. ஸ்ரீராம் தனது வகுப்பு தோழியின் சகோதரியிடம் தவறாக நடந்து கொண்டதால் பகீரத் அப்படி செய்ததாக கூறப்படுகிறது. இதையே ஸ்ரீராம் நேற்று வெளியிட்ட ஒரு வீடியோவிலும் தெரிவித்திருகிறார். இதனால் போலீஸார் பகீரத் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

வைரலான வீடியோ காட்சிகள்