PMAY திட்டத்தின் கீழ் 3 கோடி குடும்பங்களுக்கு வீடு கட்டி தர மத்திய அரசு முடிவு
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா(PMAY) திட்டத்தின் கீழ் 3 கோடி வீடுகள் கட்டுவதற்கான உதவியை மத்திய அரசு செய்யும் என்று மத்திய அமைச்சரவை இன்று அறிவித்தது. நேற்று பதவியேற்ற புதிய அரசாங்கத்தின் முதல் அமைச்சரவை கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். இதற்கு முன்னதாக, 9.3 கோடி விவசாயிகள் பயன்பெறும் பிரதமர் கிசான் நிதியின் 17வது தவணையை வெளியிடவும் பிரதமர் மோடி ஒப்புதல் அளித்தார். புதிய அரசாங்கம் பதவியேற்ற முதல் நாளில், வீட்டு வசதி மற்றும் விவசாயிகள் தொடர்பான இரண்டு முடிவுகள் முடிவுகள் எடுக்கப்பட்டன. 9.3 கோடி விவசாயிகள் பயன்பெறும் பிரதமர் கிசான் நிதியின் 17வது தவணையை வெளியிட பிரதமர் மோடி இன்று காலை ஒப்புதல் அளித்தார்.
கூடுதலாக 3 கோடி குடும்பங்களுக்கு உதவி செய்ய முடிவு
பிரதமர் கிசான் நிதியின் 17வது தவணையை தொகை 20,000 கோடி விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. "எங்களுடையது கிசான் கல்யாணுக்கு(விவசாயி நலன்) முழு அர்ப்பணிப்புள்ள அரசாகும். எனவே பொறுப்பேற்றவுடன் கையெழுத்திடப்பட்ட முதல் கோப்பு விவசாயிகள் நலன் தொடர்பானது என்பது பொருத்தமானது. விவசாயிகள் மற்றும் விவசாயத் துறைக்காக நாங்கள் இன்னும் அதிகமாக பணியாற்ற விரும்புகிறோம்." என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்நிலையில், இன்று நடந்த முதல் அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு, PMAY திட்டத்தின் கீழ் பயனுறும் தகுதியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களது வீட்டுத் தேவைகளை நிவர்த்தி செய்ய கூடுதலாக 3 கோடி கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடும்பங்களுக்கு உதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.