'என் தந்தையின் உடலை துண்டுகளாக நான் வீட்டிற்கு கொண்டு வந்தேன்': பிரியங்கா காந்தி
பிரதமர் மோடியின் கோட்டையான குஜராத் மாநிலம் வல்சாத் நகரில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கடுமையாக சாடியுள்ளார். "நான் பல பிரதமர்களை பார்த்திருக்கிறேன், ஆனால் மக்களிடம் பொய் சொல்பவரை பார்த்ததில்லை." என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார். எதிர்க்கட்சி, மக்களின் செல்வங்களை முஸ்லிம்களுக்கு மறுபங்கீடு செய்ய விரும்புவதாகவும், பெண்களின் தாலியைக் கூட விட்டுவைக்காது என்றும் பிரதமர் மோடி கூறியதை மையமாக வைத்து அவரது கருத்துக்கள் அமைந்திருந்தன. "இந்திரா காந்தி இந்த நாட்டிற்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்தார். ராஜீவ்காந்தியும் ஒரு பிரதமர் தான். நான் அவரது உடலை துண்டுகளாக வீட்டிற்கு கொண்டு வந்தேன், அவர் தன் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தார். " என்று பிரியங்கா கூறியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய மல்லிகார்ஜுன கார்கே
"இப்படி பொய் சொல்லும் நாட்டின் முதல் பிரதமர் இவர்தான் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்" என்று அவர் மேலும் கூறினார். தாய்மார்கள் மற்றும் மகள்களிடம் உள்ள தங்கத்தை கணக்கிடபட்டு, அந்த செல்வம் அதிக குழந்தைகள் இருப்பவர்களுக்கும் ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி சாமீபத்தில் கூறி இருந்தார். அப்படி ஒரு விஷயம் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இல்லை என்று அக்கட்சி தலைவர்கள் கூறி, பிரதமர் மோடியை விமர்சித்து வருகின்றனர். "எங்கள் தேர்தல் அறிக்கையில் எழுதப்படாத விஷயங்களை உங்கள் ஆலோசகர்கள் உங்களிடம் கூறி உங்களை தவறாக வழிநடத்தப்படுகிறீர்கள்" என்று இது குறித்து பிரதமர் மோடிக்கு சமீபத்தில் மல்லிகார்ஜுன கார்கே ஒரு கடிதம் எழுதி இருந்தார்.