Page Loader
சென்னையில் மீண்டும் ஒரு வெடிகுண்டு மிரட்டல்; பிரபல மாலில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
இன்று காலை அந்த தனியார் மாலுக்கு ஈமெயில் மூலம் ஒரு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது

சென்னையில் மீண்டும் ஒரு வெடிகுண்டு மிரட்டல்; பிரபல மாலில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

எழுதியவர் Venkatalakshmi V
Apr 23, 2024
03:29 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை கோயம்பேடு- அண்ணா நகருக்கு இடையே அமைந்துள்ளது பிரபலமான VR மால். பல்மாடி கட்டிடத்தில் வணிக கடைகள், உணவகங்கள் மற்றும் திரையரங்குகளுக்கு அங்கே செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை அந்த தனியார் மாலுக்கு ஈமெயில் மூலம் ஒரு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனை அடுத்து, மாலில் இருந்த பொதுமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, காவல்துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் அங்கே சோதனை நடைபெற்று வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளை குறி வைத்து இதே போன்றதொரு வெடிகுண்டு மிரட்டல் ஈமெயில் மூலம் வந்தது நினைவிருக்கலாம். பின்னர் அது பொய் மிரட்டல் என தெரிய வந்தது.

ட்விட்டர் அஞ்சல்

வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை