மீண்டும் சென்னையில் வெடிகுண்டு மிரட்டல்; இம்முறை தலைமை செயலகத்திற்கு!
கடந்த மாதம் சென்னையில் உள்ள தனியார் பள்ளிகள் சிலவற்றிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. இதனை தொடர்ந்து இன்றும் ஒரு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. ஆனால், காலை 7.30 மணி அளவில் தனியார் தொலைக்காட்சிக்கு செல்போன் மூலம் மிரட்டல் வந்துள்ளது. அதில், தலைமை செயலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என கூறப்பட்டது. இன்று முதல்வர் மு.கஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை நகரெங்கும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் இந்த வெடிகுண்டு மிரட்டல் வரவே, காவல்துறையினர் பரபரப்பாகினர். உடனடியாக தலைமை செயலகத்திற்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களை கொண்டுஅமைச்சர்கள் அறை, பேரவை நடைபெறும் இடங்கள் போன்ற முக்கிய அறைகளில் சோதனைகள் நடத்தப்பட்டது. மறுபுறம், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பதை கண்டுபிடிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.