அமெரிக்காவில் உயிரிழந்த இந்திய மாணவரின் உடல் ஹைதராபாத் கொண்டு வரப்பட்டது
இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்காவின் கிளீவ்லேண்டில் இறந்து கிடந்த இந்திய மாணவர் முகமது அப்துல் அர்பாத்தின் உடல், ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு இன்று கொண்டு வரப்பட்டது. கிளீவ்லேண்ட் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் முதுகலைப் பட்டம் படிக்க அவர் 2023 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றதாகவும், மார்ச் 7 முதல் அர்பத் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக ஏப்ரல் மாதம், அர்பத்தின் தந்தை, தனது மகனின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார். ஹைதராபாத்தை சேர்ந்த அப்துல் முகமது என்ற 25 வயது இளைஞர், ஓஹியோவில் உள்ள கிளீவ்லேண்ட் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் பெறுவதற்காக கடந்த மே மாதம் வீட்டை விட்டு வெளியேறினார்.
ஹைதராபாத்தில் உள்ள பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டல்
கடந்த மார்ச் 7ஆம் தேதி முதல் அப்துல் முகமது தங்களுடன் பேசவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கடந்த வாரம் அப்துலின் தந்தையான முகமது சலீமுக்கு தெரியாத எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பின் மூலம், கிளீவ்லேண்டில் உள்ள போதைப்பொருள் விற்பனையாளர்களால் அவர்களது மகன் கடத்தப்பட்டது அவருக்கு தெரியவந்தது. மேலும், அப்துல் முகமதை விடுவிக்க வேண்டும் என்றால், $1200 டாலர்கள் தங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று அவர்கள் மிரட்டி இருக்கின்றனர். மேலும், பணம் தர மறுத்தால் மாணவரின் சிறுநீரகத்தை மாஃபியாவுக்கு விற்று விடுவதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்காவின் கிளீவ்லேண்டில் முகமது அப்துல் அர்பாத் சடலமாக மீட்கப்பட்டார்.