Page Loader
அதிக நன்கொடை பெற்ற அரசியல் கட்சி: முதலிடத்தில் பாஜக
BJP மொத்தம் 2,243 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது

அதிக நன்கொடை பெற்ற அரசியல் கட்சி: முதலிடத்தில் பாஜக

எழுதியவர் Venkatalakshmi V
Apr 08, 2025
08:21 am

செய்தி முன்னோட்டம்

2023-24 நிதியாண்டில், பாஜக அதிகபட்ச நன்கொடை பெற்ற கட்சியாக முன்னிலையிலுள்ளது. அந்த கட்சி மொத்தம் 2,243 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது. ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ADR) வெளியிட்ட அறிக்கையின் படி, பல கட்சிகள், தேர்தல் ஆணையத்திற்கு 20,000 ரூபாய்க்கும் அதிகமாக பெற்ற நன்கொடைகள் பற்றிய பட்டியல்களை சமர்ப்பித்துள்ளன. அவற்றில், BJP மிக அதிக அளவில் நன்கொடை பெற்ற கட்சியாக அறியப்படுகிறது. அதிலும் குறிப்பாக கர்நாடக பாஜகவிற்கு மிக அதிக நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் கட்சி 281 கோடி ரூபாயைப் பெற்றுள்ளது.

நன்கொடை

குறைந்த நன்கொடை பெற்ற கட்சிகள்

மிகக் குறைவான நன்கொடை பெற்ற காட்சிகளாக ஆம் ஆத்மி கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன. கடந்த ஆண்டைப் போலவே, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி இந்த ஆண்டும் நன்கொடை எதுவும் பெறவில்லை என்று தெரிவித்துள்ளது.

நிறுவனங்கள்

மிக அதிக நன்கொடை வழங்கிய நிறுவனங்கள்

நாடு முழுவதும், 12,547 பேர் அல்லது நிறுவனங்கள், மொத்தம் 2,544.28 கோடி ரூபாய் நன்கொடையாக அரசியல் கட்சிகளுக்கு வழங்கியுள்ளனர். அதில் அதிகபட்சமாக புருடென்ட் எலக்ட்ரல் டிரஸ்ட் மொத்தம் 880 கோடி ரூபாய் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியுள்ளது. இதில், 723 கோடி ரூபாய் பாஜக-விற்கும், 156 கோடி ரூபாய் காங்கிரஸுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, டிரையம்ப் எலக்ட்ரல் பண்ட் பாஜக-விற்கு 127 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இந்த தகவல்கள் அரசியல் நன்கொடைகளின் வெளிப்படைத்தன்மையை வெளிப்படுத்துகின்றன.