தேர்தலுக்கு முன்னரே சூரத்தில் வெற்றி பெற்ற பாஜக; எப்படி?
செய்தி முன்னோட்டம்
நடைபெற்றுவரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தனது வெற்றி கணக்கைத் திறந்துவிட்டது.
குஜராத்தின் சூரத் தொகுதியில் அக்கட்சியின் வேட்பாளரான முகேஷ் தலால், வெற்றி பெற்றுள்ளார்.
ஏனெனில் எதிர்த்து போட்டியிட யாரும் களத்திலில்லை.
சூரத் மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளரான நிலேஷ் கும்பானி, தனது மூன்று முன்மொழிபவர்களில் ஒருவரைக் கூட தேர்தல் அதிகாரியிடம் முன் நிறுத்த முடியாத காரணத்தால், அவரது வேட்புமனுப் படிவம் ரத்து செய்யப்பட்டது.
அதேபோல, சூரத்தில் காங்கிரஸின் மாற்று வேட்பாளரான சுரேஷ் பத்சலாவின் வேட்புமனுவும் செல்லாததாக்கப்பட்டது.
கையெழுத்து முரண்பாடு காரணமாக அவரின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதுமட்டுமின்று, வேட்பு மனு தாக்கல் செய்த மேலும் 8 நபர்கள் தங்கள் மனுவை வாபஸ் பெற்றதால், பாஜக வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
embed
சூரத்தில் வெற்றி பெற்ற பாஜக
#ElectionBreaking | போட்டியின்றி தேர்வான சூரத் பாஜக வேட்பாளர்!#SunNews | #BJP | #Surat | #LokSabhaElections2024 pic.twitter.com/pkSMHdH6Qb— Sun News (@sunnewstamil) April 22, 2024