ஒடிசா பாஜக எம்பி பர்த்ருஹரி மஹ்தாப் தற்காலிக மக்களவை சபாநாயகராக நியமனம்
யாரும் எதிர்பாரா திருப்பமாக, பாஜக எம்பி பர்த்ருஹரி மஹ்தாப் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார். சபாநாயகர் பதவிக்கான போட்டியில் இருப்பதாகக் கூறப்படும் ஒடிசாவைச் சேர்ந்த பாஜகவின் முக்கிய தலைவரான பர்த்ருஹரி மஹ்தாப், ஜனாதிபதி திரௌபதி முர்முவால் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவி, பாரம்பரியமாக பாராளுமன்றத்தின் மூத்த உறுப்பினருக்கு வழங்கப்படும். அதன் பின்னர் அவர் பிரதமரின் அமைச்சர்கள் மற்றும் பிற எம்.பி.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். பின்னர் உறுப்பினர்கள் சபாநாயகரை ஒரு மனதாக தேர்வு செய்யும் வரை, இந்த தற்காலிக சபாநாயகர் செயலாற்றுவார். 18வது மக்களவை அதன் புதிய சபாநாயகரை ஜூன் 26ஆம் தேதி தேர்வு செய்ய உள்ளது. அதன் தொடக்க கூட்டத்தொடர் ஜூன் 24 முதல் ஜூலை 3 வரை நடைபெறுகிறது.